Thursday, August 2, 2018

எண்ணிக்கை

01. இந்நூல் எதைப்பற்றி எழுதப்பட்டுள்ளது?

இஸ்ராயேலர் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு எல்லையை அடைந்தது வரை நாற்பது ஆண்டுகளாக
நிகழ்ந்தவற்றின் தொகுப்பே இந்நூல்.

02. ஆண்டவர் மோயீசனிடம் எப்பொழுது கணக்கெடுக்கும்படி கூறினார் ?

இஸ்ராயேலர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய இரண்டாம் ஆண்டு, இரண்டாம் மாதம், முதல்நாள்;. (1:1-2).

03. கணக்கெடுக்கும் போது இஸ்ராயேலர்கள் எங்கிருந்தனர் ?

சீனாய் பாலைநிலத்தில்.(1:1).

04. யார் யாரையெல்லாம் கணக்கெடுக்கும்படி கூறினார் ?
இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குச் செல்லத்தக்க
அனைவரையும். (1:3).

05. மோயிசனுக்கும், ஆரோனுக்கும் துணையாக யார் நியமிக்கப்பட்டார்கள்?
ஒவ்வொரு குலத்தின் வீட்டுத்தலைவனும். (1:5).

06. மொத்தம் எண்ணப்பட்ட இஸ்ராயேல் மக்களின் எண்ணிக்கை என்ன?

603,550 (1:46).

07. எந்த குலத்தவரின் எண்ணிக்கை எடுக்கப்படவில்லை?

லேவி (1:49).

08. ஏன் லேவி குலத்தை மட்டும் எண்ணவில்லை?

ஆண்டவர் இக்குலத்தின் கணக்கெடுப்பு எடுக்கவேண்டாம் என்றார் (1:49).

09. லேவி குலத்திற்கு என்ன பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது?

உடன்படிக்கைக் கூடாரத்தின் பொறுப்பை (1:50).

10. லேவி குலத்தவர் எங்கே பாளையமிறங்கினர் ?

உடன்படிக்கை கூடாரத்தைச் சுற்றி (1:53).

11. முதலில் அணிவகுத்து செல்ல வேண்டிய குலம் எது?

யுதாவின் கொடியுடைய பாளையத்தவர் (2:9).

12. யுதா அணியினரின் எண்ணிக்கை என்ன?

186,400 (2:9).

13. இறுதியாக அணிவகுத்து செல்லவேண்டிய குலம் எது?

டோர் குலம் (2:31).

14. டோர் குலத்தின் மொத்த எண்ணிக்கை என்ன?

157,600 (2:31).

15. ஆரோனின் இறந்த மகன்களுக்கு பதிலாக குருக்களாக யார்
நியமிக்கப்பட்டார்கள்?

எலயாசர், இத்தாமர் (3:4).

16. ஆரோனுக்கு பணிவிடை புரிய நியமிக்கப்பட்ட குலம் எது?

லேவி குலம் (3:6).

17. குருத்துவ பணி செய்ய நியமனம் செய்யப்பட்டவர்கள் யாவர் ?

ஆரோனும், அவன் புதல்வரும் (3:10).

18. லேவியின் புதல்வர்கள் பெயர் என்ன?

கேர் சோன், கோகாத்து, மெரார்ரி (3:17).

19. லேவியர் குலத்தின் மொத்த எண்ணிக்கை என்ன?

22,000 (3:39).

20. இஸ்ராயேல் மக்களின் தலைப்பேறுகள் மொத்தம் எத்தனை?

22,273 (3:43).

21. லேவியர் எத்தனை வருடம் கூடாரப் பணிகளைச் செய்யலாம்?

இருபத்தைந்து வயதுக்கு மேலும் ஐம்பது வயதுக்குள்ளும் (8:24).

22. எக்காளம் முழங்க யார் நியமிக்கப்பட்டது?

ஆரோனின் புதல்வர்கள் (9:8).

23. தபேரா என்னும் இடத்தில் நடந்தது என்ன?

மக்கள் தங்கள் கடினப் பாடுகளைப் பற்றி முறையிட்டதால் ஆண்டவர் சினம் கொண்டு பாளையத்தின் கடைக்கோடிப் பகுதிகள் சிலவற்றை ஆண்டவர் எரித்து விட்டார் (11:1).

24. 'தபேரா"என்பதன் பொருள் என்ன?

எபிரேயத்தில் 'எரிந்து கொண்டிருப்பது" என்று பொருள் (11:3).

25. இஸ்ராயேல் மக்கள் மோயிசனைப் பற்றி தவறாக பேசியது ஏன்?

பலர் உணவிலே மிகவும் விருப்பம் கொண்டிருந்தனர். எகிப்தில் உண்ட மீன், வெள்ளாரிக்காய் போன்றவற்றின் மேல் ஆர்வம் காட்டியதால் (11:5).

26. மன்னா எவ்வாறு தோற்றமளித்தது?

கொத்துமல்லி விதைபோன்றும் முத்துப் போன்றும் இருந்தது (11:7).

27. ஆண்டவர் இஸ்ராயேல் மக்களுக்கு இறைச்சியளித்தாரா?
ஆம், அவர்களுக்கு காடைகளை அனுப்பினார் (11:31).

28. மோயிசன் எப்படிப்பட்ட மனிதராக திகழ்ந்தார் ?

பூவுலகில் அனைத்து மாந்தாரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த்
திகழ்ந்தார் (12:3).

29. மிரியாமைக்கு ஏன் தொழுநோய் பிடித்தது?

மிரியாமை மோயிசனுக்கு எதிராக பேசியதால் (12:1).

30. இஸ்ராயேல் மக்களின் ஒவ்வொரு குலத்தின் தலைவரையும் மோயிசன் எங்கே அனுப்பினார் ?

கானான் நாட்டை உளவு பார்க்க (13:17).

31. அவர்கள் எத்தனை நாட்களுக்கு பிறகு திரும்பி வந்தனர் ?

40 நாட்களுக்குப் பின் (13:25).

32. அவர்கள் கொண்டு வந்த செய்தி என்ன?

அந்நாட்டில் பாலும் தேனும் வழிந்தோடுகிறது. அங்கு வாழும் மக்கள் வலிமை மிக்கவர்கள் (13:27,28).

33. கானான் நாட்டை முதலில் சென்று பிடித்துக் கொள்ளவேண்டும் என ஆசைப்பட்டது யார்?

காலேபு (13:30).

34. கானான் நாட்டிற்கு உளவு பார்க்க சென்றவர்களில் இருவர் மட்டும்
தண்டனை பெறவில்லை. அவர்கள் யாவர் ?

யோசுவாவும்? காலேபும் (14:6).

35. ஓய்வு நாளை மீறி விறகு பொறுக்கிய மனிதன் என்ன ஆனான்?
கல்லால் எரிந்து கொலை செய்யப்பட்டான் (15:36)

36. மோயிசனுக்கு எதிராக எழும்பிய 250 தலைவர்களுக்கு நேர்ந்தது என்ன?

ஆண்டவாரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு அவர்களை விழுங்கிவிட்டது (16:35)

37. இந்த 250 பேருக்கும் தலைவர் யார் ?

கோராகு (16:6).

38. தாத்தான்? 

அபிராம் இவ்விருவருக்கும் நேர்ந்தது என்ன?

நிலம் தன் வாயைத் திறந்து அவர்களை விழுங்கிவிட்டது (16:32).

39. கொள்ளை நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை என்ன?

14,700 (16:49).

40. ஒவ்வொரு குலத்தின் கோலிலும் என்ன எழுதப்பட வேண்டும் என ஆண்டவர் கட்டளையிட்டார் ?

ஒவ்வொருவாரின் பெயரையும் அக்கோலின் மேல் எழுதும்படி
கட்டளையிட்டார் (17:2).

41. அடுத்தநாள் யாருடைய கோல் துளிர் விட்டிருந்தது?

ஆரோனின் கோல் (17:8).

42. ஆரோனின் கோல் எங்கே வைக்கப்பட்டது?

உடன்படிக்கைப் பேழைமுன் வைக்கப்பட்டது (17:10).

43. குருத்துவ பணியை ஆரோனையும் அவருடைய புதல்வரையும் தவிர வேறு எவரேனும் செய்ய அனுமதிக்கப்பட்டதா?

இல்லை (18:7).

44. இஸ்ராயேல் மக்களிடமிருந்து கிடைக்கும் பொருட்களில் லேவியருக்கு சொந்தமான பங்கு என்ன?

பத்திலொரு பங்கு (18:25).

45. ஆரோனுக்குறிய பங்கு என்ன?

ஆண்டவாரின் படையல் (18:28)

46. இஸ்ராயேல் மக்கள் முதல் மாதத்தில் எங்கு சென்றடைந்தார்கள்?

சீன் பாலைநிலத்தை சென்றடைந்தனர் (20:1).

47. சீன் பாலைநிலத்திற்கு வந்து இஸ்ரயேல் மக்கள் எங்கு தங்கினர் ?

காதேசு (20:1).

48. மிரியாம் எந்த இடத்தில் இறந்தார்?

காதேசு (20:1).

49. காதேசில் தங்கியிருந்த இஸ்ராயேல் மக்களுக்கு மோயிசன் தண்ணீர் வழங்கியது எப்படி?

பாறையிலிருந்து தண்ணீர் வரவழைத்து அவர்களுக்கு வழங்கினர் (20:11).

50. ஆண்டவர் மோயிசனிடமும், ஆரோனிடமும் காதேசில் என்ன கூறினார் ?

நான் இஸ்ராயேல் மக்களுக்கு கொடுக்கவிருக்கும் நாட்டுக்குள் அவன் நுழைய மாட்டான். ஏனெனில், 'மொரிபாவின் தண்ணீர்" அருகில் நீங்கள் என்கட்டளையை மீறினீர்கள் (20:24).

51. காதேசின் தண்ணீர் மொரிபா என அழைக்கப்படுவது ஏன்?

இஸ்ராயேல் மக்கள் ஆண்டவாரிடம் வாதாடியதால் (20:13).

52. ஏதோம் மன்னன், தன்னுடைய எல்லையை கடக்க மோயிசனுக்கு அனுமதி அளித்தாரா? 

இல்லை (20:18)

53. மோயிசன், ஆரோனையும் அவருடைய மகனையும் ஓர் என்ற மலைக்கு கொண்டு சென்று என்ன செய்தார் ? 

மோசே ஆரோனின் உடைகளை உரிந்து அவற்றை அவர் மகன் எலயாசருக்கு உடுத்தினார் (20:28).

54. ஓர் மலையில் ஆரோனுக்கு என்ன நேர்ந்தது?

அங்கேயே இறந்தார் (20:28).

55. இஸ்ராயேல் வீட்டார் ஆரோனுக்காக எத்தனை நாட்கள் துக்கம்
கொண்டாடினர் ?
30 நாட்கள் (20:29).

56. இஸ்ராயேல் மக்களை தாக்கிய மன்னன் யார் ?
அராது மன்னன் (21:1).

57. இஸ்ராயேல் மக்கள் அராது மன்னனுக்கு எதிராக என்ன செய்தனர் ?

அராது மன்னனின் நகரத்தையும், நகர மக்களையும் அழித்தனர் (21:3).

58. இஸ்ராயேல் மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசியபோது கடவுள் அவர்களை எப்படி தண்டித்தார்?

ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை அவர்களிடையே அனுப்பி சாகடித்தார்
(21:6).

59. மோசே மக்களுக்காக மன்றாடியபொழுது கடவுள் என்ன கட்டளையிட்டார் ?

வெண்கலப் பாம்பொன்றை செய்து ஒரு கம்பத்தில் பொருத்துமாறு கூறினார் . கடிக்கப்பட்டவர்கள் இதைப் பார்த்தால் பிழைப்பார்கள் (21:8).

60. எமோரிய மன்னன் சீகோன் தன் எல்லை வழியே இஸ்ராயேல் கடந்து செல்ல அனுமதித்தானா?

இல்லை (21:23).

61. சீகோன்? இஸ்ராயேல் மக்களுக்கு எதிராக எங்கு போரிட்டார் ?

யாகாஸ் (21:23).

62. யாகாஸ் போரில் நடந்தது என்ன?

இஸ்ராயேல் வாழ்முனையில் சீகோனை கொன்று அந்நாட்டை கைப்பற்றினார்
(21:24).

63. எமோரியாரின் தலைநகர் எது?

எஸ்யான் (21:26).

64. பாசான் நகர மன்னன் யார் ?

ஓகு (21:33).

65. இஸ்ராயேலை எதிர்த்து ஓகு எங்கு போரிட்டார்?

எதிரேயி (21:33).

66. ஓகுவை தோற்கடித்த பிறகு இஸ்ராயேலர் எங்கு சென்றனர்?

மோவாபிய சமவெளிக்கு(22:1).

67. மோவாபின் மன்னன் யார் ?

பாலாக்கு (22:4).

68. பிலயாம் என்பவர் யார் ?

மோவாபு இறைவாக்கினர்.

69. பாலாக்கு பிலயாமிடம் கேட்டது என்ன?

இஸ்ராயேல் மக்களை சபிக்குமாறு கேட்டார் (22:6).

70. ஆண்டவர் பிலயாமிடம் கூறியது என்ன?

எழுந்து பாலாக்கிடம் செல என்றார் (22:21);

71. பிலயாமின் கழுதை வழியில் யாரைக் கண்டது?

ஆண்டவாரின் தூதர் (22:23).

72. பிலயாம் இஸ்ராயேலை சபித்தாரா?

இல்லை அவர்களுக்கு ஆசி வழங்கினார் (23:11).

73. பிலயாம் வரவிருக்கும் மெசியாவைப் பற்றி என்ன கூறினார் ?

நான் அவரைக் காண்பேன்: ஆனால் இப்போதன்று. நான் அவரைப் பார்ப்பேன்: ஆனால் அண்மையிலன்று: யாக்கோபிலிருந்து விண்மின் ஒன்று உதிக்கும் இஸ்ராயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும் (24:17).

74. சித்திமில் இஸ்ராயேல் மக்கள் தங்கியிருந்த போது செய்த பாவம் என்ன?

மோவாபின் புதல்வியரோடு முறைகேடாக நடந்தனர் (25:1).

75. இப்படிப்பட்ட பாவத்தை செய்த பிறகு இஸ்ராயேல் மக்கள் செய்தது என்ன?

அவர்கள் தெய்வங்களைப் பணிந்து வணங்கினர் (25:2).

76. இதற்கு ஆண்டவர் என்ன தண்டனை வழங்குமாறு கட்டளையிட்டார் ?

பாகால் பெகோரை அடிபணிந்த தம் ஆட்களை கொன்று விடுமாறு
கட்டளையிட்டார் (25:5).

77. அப்பொழுது சாகடிக்கப்பட்டவாரின் மொத்த எண்ணிக்கை என்ன?
24,800 பேர் (25:9).

78. எலயாசாரின் புதல்வன் பினகாசு ஆண்டவரின் சினத்தை எவ்வாறு அகற்றினான்?

மிதியானியப் பெண்ணையும், சிம்ரியையும் கொன்று (25:8).

79. உரிமைச் சொத்தை பற்றி ஆண்டவர் கட்டளையிட்டது என்ன?

மகன் இல்லாமல் ஒருவன் இறந்துவிட்டால் அவனுடைய உரிமைச் சொத்து அவன் மகளுக்கு சேரவேண்டும் (27:8).

80. இஸ்ராயேல் மக்களுக்கென கொடுத்துள்ள நாட்டை மோயிசன் எம்மலையில் இருந்து பார்த்தார் ?

அபாரிம் மலை (27:12).

81. இஸ்ராயேலுக்கு கொடுக்கப்பட்ட நாட்டில் நுழைய மோயிசனுக்கு அனுமதி கொடுக்காதது ஏன்?

ஏனெனில் சீன்பாலை நிலத்தில்மக்கள் முன்னிலையில் ஆண்டவருடைய  புனிதத்தை எடுத்துரைக்காததால் (27:14).

82. மோசேவுக்கு அடுத்தப்படியாக இஸ்ராயேல் மக்களை வழிநடத்த கடவுள் யாரை நியமித்தார் ?

யோசுவாவை (27:22).

83. மோயிசன் யோசுவாவை எவ்வாறு நியமித்தார் ?

தம் கைகளை அவர் மேல் வைத்து (27:23).

84. மிதியானுக்கு எதிராக போர் புரிய எத்தனைப்பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் ?

இஸ்ராயேல் குலங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் 1000 பேர் (31:4).

85. இந்த படை வீரர்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?

எலயாசர் மகன் பினகாசு (31:6).

86. கொல்லப்பட்ட மிதியானின் அரசர்கள் எத்தனை?

ஐந்து (31:8)

87. இஸ்ராயேல் மக்கள் மிதியானின் பெண்களையும், குழந்தைகளையும் என்ன செய்தனர் ?

அவர்களை சிறைபிடித்தனர் (31:9).

88. இவர்களை சிறைபிடித்து என்ன செய்தனர் ?

ஆண் குழந்தைகளையும், திருமணமான பெண்களையும் கொலைசெய்தனர். திருமணமாகாத பெண்களை உயிருடன் வைத்துக்கொண்டனர் (31:17-18).

89. எத்தனை இளம்பெண்களை உயிருடன் விட்டனர் ?

32,000 (31:5).

90. 'கெனாத்" என்னும் நகர் 'நோபாகு" என மாற்றப்பட்டது ஏன்?

நோபாகு அந்நகரை கைப்பற்றியதால், அந்நகரை தம் பெயராலேயே நோபாகு என்று அழைத்தார் (32:42).

91. ஆரோன் எங்கு இறந்தார் ? அப்பொழுது அவருடைய வயது என்ன?

ஓர் மலையில், வயது 124 (33:39).

92. கானான் நாட்டை எவ்வாறு பிரித்தெடுக்குமாறு கடவுள் கட்டளையிட்டார் ?

ஒன்பது குலங்களுக்கும், பாதிக் குலத்துக்கும் திருவுளச் சீட்டு மூலம்
உடைமையாக்கிக் கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டது (34:13).

93. ஆறு நகர்களில் தங்க வேண்டாம் என ஆண்டவர் அவர்களுக்கு கூறியது ஏன்?

தற்செயலாய் ஓர் ஆளைக் கொல்பவன் எவனும் அங்கே ஓடிச் சென்று புகலிடம் பெறுவதற்காக (35:15).

94. இந்த ஆறு நகர்களும் எங்கே காணப்பட்டன?

யோர்தானுக்கு அப்பால் மூன்று நகர்களும், கானான் நாட்டுக்குள் மூன்று நகர்களும் (35:14).

No comments:

Post a Comment