Monday, June 18, 2018

இயேசு என்னும் வல்லமைமிகு நாமத்தின் செபம்

"இயேசு" என்கிற வல்லமையுள்ள நாமத்தை என் உடலுக்குள் அனுப்பி செபிக்கிறேன். சுகப்படுத்துகிற இயேசுவின் பெயரை என் மூளைக்குள்ளும், அதன் இயக்கங்களுக்குள்ளும் அனுப்பி செபிக்கிறேன். 'இயேசு' என்கிற பெயரை என் உடலில் உள்ள எல்லா எலும்புகளுக்குள், இடுப்புப் பகுதிக்குள், எலும்பு மூட்டுக்கள், கிண்ணங்கள், தசைகள், தசைநார்கள், தோல், நரம்பு மண்டலங்களுக்குள்ளும் அனுப்பி செபிக்கிறேன். "இயேசு" என்கிற மீட்பளிக்கும் ஆற்றலுள்ள பெயரை என் இருதயத்தின் ஒவ்வொரு துடிப்புக்குள்ளும் (சுருங்கி விரிதலுக்குள் அனுப்பி செபிக்கிறேன். இயேசுவின் பெயரை என் உடலில் ஓடுகிற ஒவ்வொரு இரத்த துளிக்குள்ளும், நான் சுவாசிக்கும் காற்றின் அணுக்களுக்குள்ளும் அனுப்பி செபிக்கிறேன். இயேசு என்கிற பெயரை நான் உண்ணுகிற உணவு, பருகும் நீர் மற்றும் பானங்கள், நான் பார்க்கிற ஒவ்வொரு காட்சிக்குள்ளும், பொருட்களுக்குள்ளும், நபர்களுக்குள்ளும், நான் கேட்கிற ஒலிகள், இசை, வார்த்தைகளுக்குள்ளும், என் உணர்வுகளுக்குள்ளும், என் வாயின் வார்த்தைகளுக்குள்ளும் அனுப்பி செபிக்கிறேன். அல்லேலூயா!


"இயேசு" என்கிற பரிசுத்த பெயரை என் மனதிற்குள் அனுப்பி செபிக்கிறேன். என் மனதின் ஆழ் நிலைகளுக்குள், அதன் காயங்களுக்குள், ஒருமனப்பட முடியாத அலைக்கழிப்புக்குள், துன்பம் துயரங்களிலிருந்து விடுவிக்கிற, மீட்பளிக்கிற, வாழும் உன்னத கடவுளாகிய இயேசு என்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன். "இயேசு" என்ற பெயரை மனதின் அமுக்கப்பட்ட உணர்வுகளுக்குள், சோர்வுகளுக்குள், ஏக்கங்களுக்குள் மற்றும் குற்ற உணர்வுக்குள், பழிசுமத்தப்பட்டு காயப்படுத்தப்பட்ட மனதுக்குள், நம்பிக்கையற்ற எண்ணங்களுக்குள், என் கோப உணர்வுகள், வெறுப்பு, ஏற்றுக் கொள்ள முடியாத மனிதர்கள், குழப்பமான , முடிவெடுக்க முடியாத சூழ்நிலைகள் இவற்றுக்குள் அனுப்பி செபிக்கிறேன். மனதின் எல்லா பரபரப்பான நினைவுகள், வீண் கவலைகள், சந்தேகமான, எதிர்மறையான சிந்தனைகளுக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன்.

என் வாழ்வின் கடந்த காலங்கள், நிகழ் காலங்கள், எதிர் காலங்களுக்குள் "இயேசு" என்கிற உமது பெயரை அனுப்பி செபிக்கிறேன். என் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களுக்கு ஏற்படும் தடைகள், தடை ஏற்படுத்தும் கட்டுக்கள், முன்னேற்றத்தைத் தடுக்கும் முட்டுக்கட்டைகள் இவைகளுக்குள் ஒளியூட்டுகிற இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன். என் கடந்த கால வாழ்வின் கசப்புகள், வேதனைகள், உம்மைப் பற்றிய அறிவும், விசுவாசமும் இல்லாததால் நான் இழந்து போன ஆசீர்வாதங்கள் இவைகளுக்காக இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன். என் நிகழ் காலத்தில் எல்லா தேவைகளுக்குள்ளும், வாழ்வின் ஒவ்வொரு செயல்களுக்குள்ளும் "இயேசு" என்கிற உமது பெயரை அனுப்பி செபிக்கிறேன். அல்லேலூயா.


எனக்குள் இருக்கிற எல்லா பிரச்சனைகளுக்குள்ளும், நானே அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்குள்ளும், "இயேசு" என்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன். எனது பாவம் நிறைந்த ஆன்மா, இலட்சியத்தை அடையும் முயற்சி இவைகளுக்குள்ளும் "இயேசு" என்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன். எனக்கென்று நீர் தந்திருக்கிற எல்லா உறவுகளுக்குள்ளும் இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன்.


"இயேசு' என்கிற நாமத்தை என்னால் முடியாது, என நினைக்கிற எனது நிறைவேறாத ஆசைகளுக்குள்ளாக அனுப்புகிறேன். பரிசுத்த ஆவியின் வரங்களால் என்னை நிரப்பி என்னுடைய எல்லா பாவ பலவீனங்களையும் மாற்ற "இயேசு என்கிற நாமத்தை என் உள்ளத்திற்குள் அனுப்புகிறேன். ஆவி, மனம், ஆன்மா , வாழ்வு, எதிர்காலம், இழப்பு, பணிகள், திறமைகள், படிப்பு, பலன்கள், எண்ணங்கள், கற்பனைகள், பயணங்கள், வேலைகள், பொருளாதாரம், வீடு, சொத்துக்கள், எனது குடும்பம், நண்பர் மற்றும் உறவினர்கள் மீதும் "இயேசு" என்கிற நாமத்தை ஒரு முத்திரையாக வைக்கிறேன். இயேசுவின் நாமம் என்னை தூய்மைப்படுத்துவதாக, இயேசுவின் நாமம் என்னை முழுமையாக்குவதாக. அல்லேலூயா.


அன்பு, பாசம், பரிவு, அங்கீகாரம் மற்றும் எனது எல்லா உறவுகள் மூலமாக பிசாசு எனக்கு அனுப்பி வைக்கிற எல்லா கண்ணிகளிலிருந்தும் என்னை விடுவிக்க இயேசுவின் நாமத்தை அனுப்புகிறேன். எனக்கெதிராக என்னை கட்ட அனுப்பப்பட்ட எல்லா ஏவல், பில்லி, சூனிய, மத்திரவாத கட்டுக்கள் மற்றும் தீய ஆவிகளுக்குள் இயேசுவின் பரிசுத்த நாமத்தை அனுப்புகிறேன். எனக்குள்ளாக இயேசுவின் நாமத்தை அனுப்பி, எல்லா தீமைகளுக்கெதிரான மிக வலிமையுள்ள பாதுகாப்பாக எடுத்துக் கொள்கிறேன்.


நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் என்னை சுற்றியுள்ள வான மண்டலங்களுக்குள்ளாக இயேசுவின் நாமத்தை அனுப்புகிறேன். இவற்றின் மூலமாக எனக்குள் எந்த தீமையும் நுழையாதபடி இயேசுவின் நாமத்தை அனுப்பி செபிக்கிறேன், இயேசுவின் பரிசுத்த நாமம் என்னுள் மகிமை அடைவதாக,


இயேசுவின் பெயரால் நான் புது பிறப்படைகின்றேன். இயேசுவின் பெயருக்கு என்னை அடிமைப்படுத்தி, ஒப்புக் கொடுக்கிறேன்.



ஆமென்.

No comments:

Post a Comment